காதலன் பாரதி - 1
- Divya Bharathi
- Nov 10, 2020
- 1 min read
கண்ணம்மா- என் காதலி 1
காட்சி வியப்பு
1. சுட்டும்வழிச் சுடர் தான்,- கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கருவிழி,- கண்ணம்மா
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப்- புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில்-தெரியும்
நக்ஷத்தி ரங்களடீ !
2. சோலைமல ரொளியோ -உனது
சுந்திரப் புன்னகைதான் ?
நீலக்கட வலையே - உனது
நெஞ்சி லலைகளடீ !
கோலக்குயி லோசை - உனது
குரலி னிமையடீ !
வாலைக் குமரியடீ,- கண்ணம்மா
மருவக் காதல்கொண்டேன்.
3. சாத்திரம் பேசுகிறாய்,- கண்ணம்மா
சாத்திர மேதுக்கடீ?
ஆத்திரங் கொண்டவர்க்கே,- கண்ணம்மா
சாத்திர முண்டோடீ?
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ?- இது பார்,
கன்னத்து முத்தமொன்று !
உரை
கண்ணம்மா- பாரதியின் காதலி.
-சூரியனோ சந்திரனோ என்று சந்தேக படும் அளவுக்கு அவள் கண்கள் பளிச்சென்று இருந்ததாம்.
-அவளது கரு விழிகள் வானின் கருமையை போல இருந்ததாம்.
-அவள் உடுத்தியிருக்கும் வெள்ளை பதித்த கருநீல புடவை நாடு இரவில் வானில் தோன்றும் நக்ஷத்திரங்களை போல இருந்ததாம்.
-அவள் சிரிக்கையில் மலர் தோட்டத்தில் இருக்கும் மலர்கள் மலர்வது போல் மென்மையானதாம். (
-அவளின் எண்ணங்கள் நீலக்கடலின் அலைகளை போன்றதாம்.
-அவளது குரல் குயிலின் குரலை போன்ற இனிமையாம்.
-இளம் குமரியின் மீது மயக்கம் கொண்டு தீரா காதல் கொண்டாராம்.
-இதெல்லாம் பேசும் பொது அவள் சாத்திரம் பேசுகிறாள் திருமணம் இல்லமால் இப்படி பேசலாமா என்பது போல, அதற்கு அவர் கூறுவது சாத்திரங்கள் நம்மை போன்ற காதலர்களுக்கு எதற்கடி
-பெரியவர்கள் சம்மதத்தில் திருமணம் பின்னர் செய்து கொள்ளலாம், -அதுவரையில் எப்படி காத்திருக்க முடியுமடீ கண்ணம்மா, என்று கூறி கன்னத்தில் ஒரு முத்தமிட்டார் காதலன் பாரதி.
1. வாலைக் குமரி- வயதுக்கு வராத இளம் பெண்
2. வதுவை முறைகள்- திருமணம்
எப்படி பட்ட காதலன் பாரதி ??
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
Arumai.
I would like to share my all time favorite of the legendary poet. Please read the following "amutha oottru" lines.
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று)
நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக் (காற்று)