மேகம்- #கிறுக்கல்கள்
- Divya Bharathi
- Jul 19, 2020
- 1 min read

மேகம் போல் வெண்மை கொள்ள ஆசை
மேகம் போல் கருமை கொள்ள ஆசை
மேகம் போல் மெல்லிடை கொள்ள ஆசை
மேகம் போல் சுற்றி திரிய ஆசை
மேகம் போல் நிழல் கொடுக்க ஆசை
மேகம் போல் கண்ணீரை தேக்கி வைக்க ஆசை
மேகம் போல் எல்லோர் முன்பும் பாரத்தை இறக்கி வைக்க ஆசை
மேகம் போல் பிரிந்து செல்ல ஆசை
மேகம் போல் பல வேடங்களில் நடித்து கொள்ள ஆசை
மேகம் போல் கோபித்து கொள்ள ஆசை
மேகம் போல் இரவும் பகலும் விழித்து இருக்க ஆசை
மேகம் போல் காற்றின் வழியே ஓடிக்கொண்டிருக்க ஆசை
மேகம் போல் நிறம் மாற ஆசை
மேகம் போல் மறைத்து விட ஆசை
மேகம் போல் உலகை சுற்ற ஆசை
மேகம் போல் பொருந்தி கொள்ள ஆசை
Cute lines😍